சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி அதன் துணைவேந்தர் கௌரி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் மதிவாணன், பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நினைவாக 'புதிய மை ஸ்டாம்ப்' என்ற தபால் தலையை துணைவேந்தர் கெளரி வெளியிட்டார். சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி பேசும்போது, ’சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையை தேர்வு செய்து படித்தேன். அதனால் அத்துறையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.15 லட்சம் துறையின் வளர்ச்சிக்காக வழங்கினேன்.
அமெரிக்காவில் உள்ள ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தில் லீடர்ஷிப் புரோகிராமிங் படித்து அதிலும் அலுமினியாக உள்ளேன். மேலும் சென்னை ஐஐடியிலும் அலுமினியாக இருக்கிறேன். அமெரிக்காவின் ஹார்ட்வேர் பல்கலைக்கழகம், ஐஐடி கல்வி நிறுவனங்களில் அலுமினி மிக வலுவாக உள்ளது. அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்திலும் அலுமினி வலுவாக இருக்க வேண்டும். அதற்கு முன்னாள் மாணவர்கள் அனைவரும் அலுமினிக்கு(alumini) தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
'விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் கூடியுள்ள அனைத்து முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் திரைப்படத்தில் முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்க்க பாடுபடுவது போல் கதை அமைந்திருப்பார். அதேபோல், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களை தேடி, தேடி இன்றைய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் துணைவேந்தர் இணைத்துள்ளார்’ என்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கெளரி: ’சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ மாணவியரின் சங்கம் மீண்டும் இணைந்து நடத்தும் பேரவையின் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்கள் கலை, கல்வி அரசியல் என அனைத்து உயரிய பதவிகளில் உலகம் முழுவதிலும் உள்ளனர்.