தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம் ‘ சூ மந்திரகாளி’

பிரபல இயக்குநர் சற்குணம் வழங்கும் நகைச்சுவை திரைப்படம் ‘ சூ மந்திரகாளி’. செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சூ மந்திரகாளி  ஈஸ்வர் கொற்றவை  soo manthrakali  soo manthrakali movie releasing  soo manthrakali movie releasing date announced  cinema update  cinema latest update  சினிமா செய்திகள்  தமிழ் புது படம்  latest tamil movie  movie update
சூ மந்திரகாளி

By

Published : Sep 19, 2021, 2:46 PM IST

சென்னை: இயக்குநர் சற்குணத்தின் உதவியாளரும், எழுத்தாளருமான ஈஸ்வர் கொற்றவையின் புதிய படம் "சூ மந்திரகாளி”. செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து படத்தை பற்றி இயக்குநர் கூறியாதவது, "சேலத்தில் பங்காளியூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பது தான் இவர்களது வேலை.

சூ மந்திரகாளி

படத்தின் கதாநாயகன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக, அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து வர கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.

அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகான இளம் மந்திரவாதியாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர் விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான்.

ஆனால், பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால், அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா, பங்காளியூர் திருந்தியதா என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ‘சூ மந்திரகாளி’ என்றார்.

ஈஸ்வர் கொற்றவை

புதுமுகம் கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க, சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அன்னம் மீடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் சற்குணம் வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார்.

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூ மந்திரகாளி’ படத்திற்கு முகமது பர்ஹாண் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன் இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது . கலை - J.K.ஆண்டனி , படத்தொகுப்பு - கோகுல், நடனம் - தீனா, சண்டை பயிற்சி - டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM).

இதையும் படிங்க:சரத்குமாரின் சமரன் பூஜையுடன் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details