சென்னை: மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசுகையில், "ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. மாநில சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி. மொழி, சாதி, மதம் கடந்து சிந்தித்து சமத்துத்துடன் பார்பவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. பாலின சமத்துவதற்காக தொடர்ந்து போரடியாவர் அவர்.
இந்தியாவில், பெண்கள் அனைத்து துறைகளிலும் மகத்தாக சாதித்திருந்தனர். நீண்ட நெடிய போராட்டங்களில், ஏற்றமும் இறக்கமுமாக இருந்துள்ளனர். பெண்களுக்கான உரிமையை பெறுவது நீண்ட பயணம் உடையது. இதில் பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும். இன்னும் பெண்கள் எத்தனையோ தடைகளை தாண்டி தான் உரிமைகளை பெற வேண்டியதாக இருக்கிறது.
கராச்சியில், நடைபெற்ற மாநாட்டில், பெண்கள் உரிமைகளை கொண்டாடுவது, அரசியல், பொருளாதாரம், செயலில் சரியான பங்கு அளிப்பது. ஓட்டு உரிமை என்பதை உறுதிபடுத்தினர், இது தான் பாலின சமத்துவம். அம்பேத்கர் இந்த தத்துவங்களை உள்வாங்கி, அரசியல் சாசன சட்டத்தின் மூலம் மேலோங்கி செல்லப்பட்டது. பெண்களுக்கு கல்வி கொடுத்தால், குடும்பம் நன்றாக இருக்கும். ஒரு நாட்டில் மகளிரை அதிகாரப்படுத்தினால், இந்தியா அதிகாரப்படுத்தப்படும் என்பது நேருவின் வார்த்தைகள் ஆகும். தலைமைத்துவத்திற்கு இந்திரா காந்தியை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.
முன்னாள் மறைந்த பிரதமர், ராஜீவ் காந்தி கொண்டு வந்த 33% சதவீத இடஓதுக்கீடு பெண்களுக்காக பஞ்சாய்த்து ராஜ் சட்டத்திலும், உள்ளாட்சியிலும் கொண்டு வந்து, பெண்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்து ஒரு சமூக புரட்சிக்காக அது அமைத்திருந்தது. பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் எப்போது வரும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வந்து தான் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி தரும். பாராளுமன்றத்தில் நாங்கள் கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறாமல் போனது. இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கும் எப்போது வரும் என்பது கேள்வி குறியாகவே இருக்கிறது.
இண்டியா (I.N.D.I.A.) கூட்டணி தான் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றி தர வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரது கருத்துக்கள் பெண்களின் வாழ்வில், புரட்சிக்கு வித்தாக இருந்து வருகிறது. இந்தியாவில் தமிழகம் பெண்களுக்கான ஒளி விளக்காக உள்ளது. பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தமிழக காவல் துறையில் நான்கில் ஒரு பங்காக பெண்கள் உள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய செயல் ஆகும். பெற்று தந்த உரிமைகளை எல்லாம் சீரழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது திமுக தான்!" "எனக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய உறவு உண்டு" - மகளிர் மாநாட்டில் பெண் ஆளுமைகள் பேச்சு!