தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாயை அறையில் பூட்டி வைத்து மிரட்டிய மகன்.. கதவை உடைத்து காப்பாற்றிய தீயணைப்புத்துறை.. - Crime news

கொரட்டூரில் தாய் மற்றும் சகோதரியை வீட்டில் உள்ள அறையில் பூட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மாவை அறையில் பூட்டி வைத்து மிரட்டிய மகன்!
அம்மாவை அறையில் பூட்டி வைத்து மிரட்டிய மகன்!

By

Published : Jan 6, 2023, 7:24 AM IST

சென்னை:கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர், குணசேகரன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் காமேஷ் கண்ணன், தனது சகோதரியை ஒரு அறையில் பூட்டிவிட்டு, தாயை வேறு ஒரு அறையில் உள்ளே அழைத்துச் சென்று தாழிட்டு கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.

கொரட்டூர்

அதேபோல தன்னையும் தாக்கிக்கொள்வதுபோல் அச்சுறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிரிஷ்ணமூர்த்தி, காமேஷ் கண்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருப்பினும், அதனை காமேஷ் கண்ணன் ஏற்கவில்லை. எனவே அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வந்த தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், கதவை உடைத்து திறந்து காமேஷ் கண்ணன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர்.

அதன்பின் அவரது தாய் மற்றும் சகோதரியை பாதுகாப்ப மீட்ட காவல் துறையினர், காமேஷ் கண்ணனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், காமேஷ் கண்ணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சிறிது மனனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பின்பு குணமாகியுள்ளர்.

அவருக்கு ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் சில மாதங்கள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், அவரது மனைவி 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து சரியான வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது தந்தை குணசேகரன், காமேஷ் கண்ணனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமேஷ் கண்ணன், அவரது பெற்றோரை அச்சுறுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது. பின்னர் காமேஷ் கண்ணன் எச்சரிக்கப்பட்டு, பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:ண்ணில் மிளகாய்ப்பொடி தூவி வாகன காப்பக உரிமையாளர் கொலை - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details