கிருஷ்ணகிரி அருகே வேலாம்பட்டியில் பொதுக்குழாயில் துணி துவைத்த ராணுவ வீரரின் மனைவிக்கும், அவர்களது உறவுக்கார கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியதில் ராணுவ வீரர் பிரபு, அவரது சகோதரர் பிரபாகரன், அவரது தாய், தந்தையர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் காயமடைந்த ராணுவ வீரர் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு பாஜக சார்பில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ராணுவ வீரர் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பேசியதாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்விட்டர் பதிவில், “ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள்" - அண்ணாமலை முன்னிலையில் சர்ச்சை பேச்சு