தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 24, 2020, 11:29 AM IST

Updated : Dec 24, 2020, 1:19 PM IST

ETV Bharat / state

‘குப்பைக்கு கட்டணம் இல்லை’ - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

சென்னை: மாநகராட்சியில் குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டமான திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Solid Waste Management User Payment Indefinite Deposit said chennai corporation
Solid Waste Management User Payment Indefinite Deposit said chennai corporation

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சொத்துவரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணத்துடன் சொத்து வரி!

Last Updated : Dec 24, 2020, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details