சென்னைநங்கநல்லூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், தலா 50 ஆயிரம் என 51 திருநங்கைகளுக்கு 25,50,000 ஆயிரம் மானியமும், அதுபோல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் 19 குழுக்களுக்கு 14 லட்சத்து 50 ஆயிரம் சுழல் நிதியும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "கடந்த 2008 ஆம் ஆண்டு வரையில் திருநங்கைகள் படிக்க முடியாமல், குடும்ப அட்டை இல்லாமல் இருந்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் திருநங்கை என பெயரிட்டு அதற்கான வாரியம் அமைத்தார். அதனை அடுத்து அவர்களுக்கு சமுகத்தில் மரியாதை கிடைத்தது, படிக்க முடிந்தது.
ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் மூன்றாம் பாலின வாரியம் என பெயர் மட்டும் தான் மாற்றினார்கள். உதவி கிடைக்கவில்லை. எனவே கருணாநிதி வழியில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதனை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 18 வயது நிறைவடைந்த திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க கோரினார்.