சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் தங்கள் கருத்துகளை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்துவிட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்குள்ள சட்டத்தை அந்நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.