தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகளை சரிபார்க்க சமூக நீதிக் கண்காணிப்புக்குழு முடிவு

வரும் மார்ச் மாதம் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்று நேரில் சென்று சரிபார்க்கவும் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு முடிவு செய்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா
கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா

By

Published : Feb 7, 2022, 10:41 PM IST

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (பிப்.) காலை 10.30 மணியளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் சமூக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் அறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • தமிழ்நாடு அரசு சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு, இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதி தொடர்பான தங்களின் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோர், கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் முகவரி: “sjmc.srds@tn.gov.in”
  • சமூகநீதி பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடம், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்துடனும், சமூகநீதி தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் இலக்குடனும், சமூகநீதி தொடர்பான அறிக்கைகள், புள்ளிவிவரங்கள் ஆகியனவற்றைத் தொடர்ந்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
    கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா என ஆராய இருக்கும் குழு
  • அதன் பொருட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் வெளியீட்டுத்துறை மூலமாக, சமூக வலைத்தளத்தில் ஒரு பக்கத்தை உடனடியாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வரும் மார்ச் மாதம் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று நேரில் சென்று சரிபார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு அரசு

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் மங்கத் ராம் ஷர்மா உறுப்பினர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர்.இராஜேந்திரன், கோ.கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் சாந்திஸ்ரீ

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details