சென்னை:பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி "சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்" என்று கடந்தாண்டு தமிழ்நாடு அரசு அறிவித்ததுது. அந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியார் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறை செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறை செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது ஸ்டாலின் "சமூகநீதி உறுதிமொழியை" வாசிக்க அவரைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:"ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ?" - டிடிவி தினகரன் கண்டனம்