சென்னை ஆவடி மாநகராட்சி அருகே தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டம், அயப்பாக்கம் ஊராட்சியை ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், அயப்பாக்கம் ஏரியை மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக தூர்வார வேண்டும், பஞ்சமி நிலங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.