தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடிப்படை வசதி கோரி தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மனு - social activist gave petition to tambaram corporation commissioner

கணபதிபுரம் பகுதியில் அடிப்படை வசதி செய்துதர வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம், ஆட்டோ ஓட்டுநர்கள் மனு கொடுத்துள்ளனர்.

மாநகராட்சி ஆணையரிடம் மனு
மாநகராட்சி ஆணையரிடம் மனு

By

Published : Dec 22, 2021, 10:17 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் ரமேஷ். இவர் நேற்று (டிசம்பர் 21) பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்களுடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையரைச் சந்தித்துள்ளார்.

கணபதிபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என மனு அளித்தனர். அதில், "ஜிஎஸ்டி சாலை அருகேயுள்ள இரண்டு சுரங்கப் பாதைகளிலும் மின் விளக்கு வசதி அமைத்துத் தர வேண்டும்.

அதேபோல் ஜிஎஸ்டி சாலை இந்து மிஷன் மருத்துவமனை அருகேயுள்ள சிக்னல் பகுதியில் நான்கு சக்கரம், ஆட்டோ செல்ல வசதி செய்துதர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது - ககன் தீப்சிங் பேடி

ABOUT THE AUTHOR

...view details