தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 4,822 சாலைகள் சீரமைப்பு - chennai corporation

சென்னையில் இதுவரை 4,822 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை 4,822 சாலைகள் சீரமைப்பு
சென்னையில் இதுவரை 4,822 சாலைகள் சீரமைப்பு

By

Published : Oct 30, 2022, 12:59 PM IST

சென்னை மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் இதர துறை சார்ந்த பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னையில் உள்ள சாலைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதேநேரம் மழைக்கு முன்பாக சேதமடைந்த சாலைகளில் பேட்ஜ் வொர்க் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், சென்னையில் இதுவரை 4,822 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (அக் 29) ஒரே நாளில் 197 சாலைகள் தற்காலிகமாக செப்பனிடப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தாம்பரம் மாநகராட்சியில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details