தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

58% வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 58 சதவீதம் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
இதுவரை 58 சதவீதம் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு

By

Published : Dec 1, 2022, 7:45 PM IST

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் பணிகள் மூலம் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஒட்டுமொத்த வாக்காளர்களில் 58 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வேட்புமனுவில் போலி தகவல்: முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ரத்து!

ABOUT THE AUTHOR

...view details