அம்மா மினி கிளினிக் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக் அமைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இதுவரை 55 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 28,954 பேர் பரிசோதனை செய்துள்ளனர். நேற்று (ஜன.19) மட்டும் 755 பேர் பரிசோதனை செய்துள்ளனர்.