சென்னை:எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட்டையா, நேற்று (ஜூன் 26) காலை வீட்டின் வெளியே இருந்தபோது அங்கு விஷத்தன்மை மிக்க நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு சுற்றித்திரிந்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்து அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டனர்.
பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விடப்பட்டது... விஷப்பாம்புகள் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
“இந்த பகுதியில் அதிகளவில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே பெரும் அச்சத்துடனே இருந்து வருகிறார்கள்.
முன்னதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் இப்பகுதியிலிருந்த பாம்புகள் பிடிக்கப்பட்டதால், பாம்புகள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
ஆனால் கடந்த 2 வருடங்களாக பாம்பு பிடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், தற்போது குடியிருப்பில் அதிகளவில் பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றைப் பிடிக்க அனல் மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:காதலித்து ஏமாற்றிய இளைஞர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது