சென்னை: மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜூலை 2) சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த பயணி ஒருவர், துபாய் நாட்டிலிருந்து, மும்பை வழியாக பெருமளவு தங்கத்தை சென்னைக்கு கடத்தி வருவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அதிகாரிகள் இலங்கையைச் சேர்ந்த முகமது இம்ரான் (30) என்ற பயணியின் உடைமைகளில் சோதனையிட்டனர். அதனுள் 11 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பாா்த்தபோது, தங்கப் பசை இருந்தது.