சென்னை விமான நிலையத்திலிருந்து, ஹைதராபாத்திற்கு செல்லக்கூடிய விமானத்தில் கஞ்சா கடத்தி செல்வதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் விமான நிலைய புறப்படும் இடத்திற்கு விரைந்து பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ஐஸ் பாக்ஸில் மறைத்து வைத்து 3 கிலோ கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஸ் பெட்டியில் வைத்து கஞ்சா கடத்தல்: பெண் உள்பட இருவர் கைது! - சென்னை விமான நிலையம்
சென்னை: ஐஸ் பெட்டியில் 3 கிலோ கஞ்சாவை மறைத்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
![ஐஸ் பெட்டியில் வைத்து கஞ்சா கடத்தல்: பெண் உள்பட இருவர் கைது! arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11378728-211-11378728-1618236637107.jpg)
arrested
கஞ்சாவை எடுத்து சென்ற மயிலாப்பூரை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கற்பகத்திடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மொய்தீன் கஞ்சாவை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். இதனடிப்படையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மொய்தீனையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர். மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.