துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று (டிசம்பர் 16) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடமைகளை சோதனையை செய்தனர். அவரது உடமைகளில் எதுவும் இல்லை.
சென்னையில் ரூ. 86.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - smuggled gold rate
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட வரப்பட்ட ரூ. 86.5 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 180 கிராம் தங்க பசை கண்டுபிடித்தனர். அதோடு அவருடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து 600 கிராம் எடை உடைய 2 பெரிய தங்கச் செயின்களையும் கைப்பற்றினர். மொத்தமாக அந்தப் பயணியிடம் இருந்து 1 கிலோ 780 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 86.5 லட்சம். இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:சென்னை பயணிக்கு மன உளைச்சல், எமிரேட்ஸ் விமான நிறுவனம் இழப்பீடு