சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பு! - புதிய அறிவிப்பு
சென்னை: சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை சார்பாக புதிய அறிவிப்புகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
TN assembly
சட்டபேரவையில் சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை சார்பாக புதிய அறிவிப்புகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் அறிவித்தார். அவை கீழ் வருமாறு,
- திருச்சி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் அரிசனங்கள் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு பேவர் பிளாக் இயந்திரம் மற்றும் சாம்பல் செங்கல் தயாரிக்கும் இயந்திரம் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
- மதுரை ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- கோவை மாவட்ட ஆயுத சேம காவலர் குடும்ப நல தொழில் கூட்டுறவு சங்கத்தின் பழுதடைந்த தொழில் கூடம் ரூ.7.88 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
- புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கயிறு தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.10 லட்சம் செலவில் தானியங்கி கயிறு திரிக்கும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.
- புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வல்லவாரி ஆதி திராவிடர் கயிறு தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.10 லட்சம் செலவில் தானியங்கி கயிறு திரிக்கும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலயம் ஆதி திராவிடர் சேம்பர் செங்கல் தயாரிப்பு தொழில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் செங்கல் சூளை மற்றும் கால்வனை சிங் தகடுகளால் மூடப்படும்
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் ஆதி திராவிட சாக்குப் பை கைத்தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் பட்டறை அமைத்தல் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்
- கரூர் ஆடைகள் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அம்பலக்காரன்பட்டி கிராமத்தில் சிட்கோ நிறுவனத்தின் மூலம் புதிய தொழிற் பேட்டை அமைக்கப்படும்.