தமிழ்நாடு

tamil nadu

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

By

Published : Oct 8, 2022, 5:47 PM IST

தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும்- தா.மோ.அன்பரசன்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும்- தா.மோ.அன்பரசன்

சென்னை: தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் தொழில் நிறுவன கண்காட்சியில் பங்கு கொள்ள சென்றார்.

தா.மோ.அன்பரசன்

அவருடன் தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், நிதித்துறை அரசு துணை செயலாளர் சி.பிஆதித்யா செந்தில்குமார், தொழில் வணிக கூடுதல் கமிஷனர் கிரேஸ் பச்சாவ் உள்பட அதிகாரிகள் சென்றனர். 'எவெக்டார்' விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டு அந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்ய அமைச்சர் தா.மோ. அன்பரசன் அழைப்பு விடுத்தார்.

இந்த பயணத்தை முடித்து கொண்டு துபாய் வழியாக சென்னை வந்தடைந்தார். அவரை பல்லாவரம் சட்டப்போது உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் திமுகவினர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 3ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கண்காட்சி செக் குடியரசு நாட்டில் நடந்தது. அதில் தமிழ்நாடு அரசு சார்பில் நானும் துறை செயலாளர், தொழில் முனைவோர் உள்பட 38 பேர் பங்கேற்றோம். அந்நாட்டு பொருளாதார துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வர வேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் அனைத்து சலுகைகளும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தேன். சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் கிளஸ்டரை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஆவண செய்வதாக செக் குடியரசு நாடு அமைச்சர் உறுதி அளித்து உள்ளார். தமிழ்நாட்டில் உதிரி பாகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

செக் குடியரசு நாட்டில் உதிரி பாகங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. தொழில் முனைவோர் தொழிற்சாலைகளுக்கு சென்றுவிட்டு 2 நாள் கழித்து சென்னை திரும்புகின்றனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய பணியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமான தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்.

இதையும் படிங்க:சென்னை மருத்துவமனையில் திடீரென இடிந்து விழுந்த ஃபால்ஸ் சீலிங்

ABOUT THE AUTHOR

...view details