சென்னை, பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்குட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சி, உட்கோட்டை பகுதியில் உள்ள மரக்கட்டைகளை எரித்து மரக்கரி தயாரிக்கும் இடத்தில் கொத்தடிமைகளாகச் சிலர் வேலை பார்த்து வருவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ரத்னா, பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
10ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வந்த 13 நபர்கள் மீட்பு! - ஆண்டு
சென்னை : பூவிருந்தவல்லியில் கடந்த 10ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 நபர்களை வருவாய்த் துறையினர் மீட்டனர்.
விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் இதன் உரிமையாளர் சங்கர்(51), என்பவர் மரக்கட்டைகளை எரித்து அதிலிருந்து மரக்கரிகளை சேகரிக்கும் வேலைக்கு முன்பணமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து அவர்களை வேலைக்கு கொண்டு வந்ததும், இதுவரை அவர்களுக்கு உரிய முறையில் சம்பளம், உணவு அளிக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து அவர்களை மீட்ட வருவாய்த்துறையினர் அவர்களை சொந்த ஊருக்கு வேன் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்த இடத்தின் உரிமையாளர் சங்கர் என்பவரைத் தேடி வருகின்றனர். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, கிராம நிர்வாக அலுவலர்கள் மகேஷ்,மணிவண்ணன் உட்பட வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்