தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய்க்கு மாற்று சிவகார்த்திகேயனா? - எஸ்.ஜே.சூர்யா மறுப்பு - இதுபோன்ற தலைப்பை எதிர்பார்க்கவில்லை எஸ்.ஜே.சூர்யா

விஜய்க்கு மாற்று சிவகார்த்திகேயன்தான் என்று தான் கூறியதாக வெளியான செய்திக்கு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற தலைப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதை எதிர்பார்க்கவில்லை - எஸ்.ஜே.சூர்யா அதிருப்தி!
இதை எதிர்பார்க்கவில்லை - எஸ்.ஜே.சூர்யா அதிருப்தி!

By

Published : Apr 30, 2022, 7:16 AM IST

சென்னை:இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யா தற்போது கடமையை செய், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய்க்கு மாற்று சிவகார்த்திகேயன்தான் என்று இவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் நான் கூறவந்தது ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தனியிடம் இருக்கு. இதுதான் நான் கூறவந்தது. ஆனால் இவர்களிடம் இருந்து இதுபோன்ற ஒரு தலைப்பை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'தலைவரே... தலைவரே...'; எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் போனி செய்த சொமோட்டோ!

ABOUT THE AUTHOR

...view details