தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு : தமிழ்நாட்டில் மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி - தமிழ்நாடு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று (மே 06) புதிதாக 64 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை இயக்குநகரம் தெரிவித்துள்ளது.

corona update  tamil nadu corona update  covid update  கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா பாதிப்பு  கரோனா நிலவரம்
கரோனா

By

Published : May 6, 2022, 10:32 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (மே 06) கரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 17 ஆயிரத்து 682 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும், தமிழ்நாட்டில் 62 நபர்களுக்கும் என 64 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 50 லட்சத்து 89 ஆயிரத்து 442 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 34 லட்சத்து 54 ஆயிரத்து 217 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது தெரியவந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 474 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 56 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றினால் யாரும் இறக்கவில்லை. இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என தொடர்ந்து இருந்து வருகிறது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனோ

ABOUT THE AUTHOR

...view details