தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 22ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, அனைத்துத் துறைகளின் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் கோரிக்கைகள் மற்றும் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பதலளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடித்துவைப்பு - Tamil Nadu Legislative Assembly Completed
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்ததாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
Governor Panwarilal Brokit
மேலும், தண்ணீர் தட்டுப்பாடு, நீட் தேர்வு, அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஒருமாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.