சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாலை நேரங்களில் இசை பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், இசை பயிற்சி அளிக்கும் 35 வயது நபர், சிறுமியை காதலிப்பதாக கூறி வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தனது செல்போனிலும் போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மியூசிக் வகுப்புக்கு சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - திருவள்ளூர் மகிளா நீதிமன்றம்
சென்னையில் மியூசிக் வகுப்புக்குச் சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதை வைத்து மிரட்டிய ஆசிரியர், பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த இசை பயிற்சி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து ஆசிரியரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:Crime: வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்!