சென்னை: பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய சம்பவம் குறித்து கைது செய்யப்பட ஆறு இளைஞர்கள் விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய சரகத்தில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் சுனில் என்பவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் ஒன்றுகூடி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. அதனடிப்படையில் காவல்துறையினர் அவர்களை தேடிவந்தனர்.