தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி! - டெங்கு காய்ச்சல்

சென்னை பல்லாவரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி!
சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி!

By

Published : Nov 8, 2022, 4:15 PM IST

சென்னை:ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ்குமாரின் 6 வயது மகள் ராகஸ்ரீ. பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வந்த ராகஸ்ரீ கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழப்பு குறித்து மருத்துவமனை கேட்டபோது, அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார் என
தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாம்பரம் மாநாகராட்சி அலுவலர்கள் அச்சிறுமியின் குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசனி தெளித்து சுத்தம் செய்ததோடு அப்பகுதியில் காய்ச்சல் முகாம் நடத்தினர்.

இதையும் படிங்க: சென்னை பேருந்தில் பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பயணித்த மாணவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details