தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ரவுடிகள் 6 பேர் ஆயதங்களுடன் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல் - ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது

சென்னை: சங்கர் நகரில் பிரபல ரவுடிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் பயங்கர ஆயதங்கள், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

six-rowdies-arrested
six-rowdies-arrested

By

Published : Jul 23, 2020, 8:34 PM IST

சென்னை பல்லாவரம் பொழிச்சலூரில் சந்தேகப்படும் வகையில் 6 பேர் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், குடியிருப்பில் பதுங்கியிருந்து அவர்கள் 6 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் 6 பேரும் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த வினித்(22), ராகேஷ்(23), பொழிச்சலூரைச் சேர்ந்த கருணாகரன்(38), மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த கட் (எ)கரன் (23), கோகுல்(21) மற்றும் திருவற்றியூரைச் சேர்ந்த அஜித்குமார்(26) என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் பிரபல ரவுடிகள் என்பதும் அவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வந்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அரிவாளுடன் ஊருக்குள் வலம்வந்த ரவுடிகள் - வெளியான சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details