தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் புதிதாக 6 மகளிர் காவல் நிலையம்: நீங்க எந்த எல்லைக்குள்ள வரீங்க?

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

chennai
சென்னையில் புதிதாக 6 மகளிர் காவல் நிலையம்

By

Published : Apr 6, 2023, 7:24 AM IST

சென்னை: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேற்று காலை அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

இதே போன்று கோயம்பேடு காவல் நிலைய வளாகத்தில் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையம், புழல் காவல் நிலைய வளாகத்தில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவான்மியூர் காவல் நிலைய வளாகத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம், தரமணி காவல் நிலைய வளாகத்தில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையம், விமான நிலையம் காவல் நிலைய வளாகத்தில் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என 6 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் சென்னை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

தற்போது, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் எல்லை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கோட்டூர்புரம் காவல் நிலையம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைகளிலும், தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தரமணி காவல் நிலையம் மற்றும் துரைப்பாக்கம் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைகளும், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நீலாங்கரை காவல் நிலையம் மற்றும் திருவான்மியூர் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைக்குள் வரும்.

மேலும், மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விமான நிலைய காவல் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைகளும், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புழல் காவல் நிலையம் மற்றும் மாதவரம் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைகளும், கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கோயம்பேடு காவல் நிலையம் மற்றும் CMBT காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைகள் உட்பட்டவர்கள் இந்த புதிய 6 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த புதிய காவல் நிலையத்தில் இன்று முதல் புகார்கள் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் உள்ள முந்தைய வழக்குகள் ஒரு வார காலத்திற்குள் மாற்றப்படும். அனைத்து காவல் நிலையத்திற்கும் ஆய்வாளர் உட்பட காவலர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது". இதுவரை சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டு 32 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது மேலும் 6 காவல் நிலையங்கள் துவங்கப்பட்டதால் மொத்தம் 38 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10th மாணாக்கர்கள் திறனறிவுத்திட்டத்தில் பாஸானால் மாதம் ரூ.1000; ஐஐடியில் ஸ்பெஷல் கோச்சிங்: CM-ன் அதிரடி திட்டம்

ABOUT THE AUTHOR

...view details