தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மக்களை அச்சுறுத்தும் அபாயகரமாக பைக் சாகசம்: ஆறு பேரை தூக்கிய போலீஸ்

சென்னையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி மக்களை அச்சுறுத்திவந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

By

Published : Mar 28, 2022, 7:05 AM IST

bike adventurous  bike adventurous in chennai  chennai bike adventurous  six member arrested for involved in bike adventurous  பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது  சென்னையில் பைக் சாகசம்  பைக் சாகசம்  அபாயகரமாக வாகன ஓட்டிய ஆறு பேர் கைது
பைக் சாகசம்

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுப்படுபவர்களை கண்டறிந்து கைது செய்ய பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்பேரில், போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறையினர் பைக் ரேஸில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கைது செய்துவருகின்றனர்.

வில்லிவாக்கம் சாலையில் ரேஸ்:அந்த வகையில் நேற்று (மார்ச் 28)திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், வில்லிவாக்கம் சாலை ரயில்வே மேம்பாலம் கீழே இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட்ட, அம்பத்தூரை சேர்ந்த ராஜேஷ் (20) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயம்பேடு 100 அடி சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பைக் ஓட்டிய செங்குன்றத்தை சேர்ந்த ஸ்ரீதர் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல அயனாவரம் நியூ ஆவடி ரோடு பகுதியில் அம்பத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (20), மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கொளத்தூரை சேர்ந்த சரத்குமார் (19), பாண்டி பஜார் மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய இரண்டு சிறார்களை கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து விலை உயர்ந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ரூ.42,42,601 அபராதம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details