தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - rain in chennai

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 30) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

By

Published : Aug 30, 2021, 3:06 PM IST

தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று (ஆகஸ்ட் 30) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஆகஸ்ட் 31) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (செப். 1) கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதிகள்

இன்று (ஆக்ஸ்ட் 30) கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று (ஆகஸ்ட் 30) முதல் நாளை (ஆகஸ்ட் 31) தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details