இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், “பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பதவி உயர்வு! - பள்ளிக் கல்வித்துறை
சென்னை: ஆறு மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
![மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பதவி உயர்வு! dpi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7384231-866-7384231-1590722569081.jpg)
திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், சேலம் ஊரகம் மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குனர் (சட்டம்) பணியிலும், லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் தொடக்கக் கல்வி இயக்ககம் துணை இயக்குநர் நிர்வாகம் பணியிலும் நியமிக்கப் படுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பூபதி ஆசிரியர் தேர்வு வாரியத் துணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் செந்திவேல்முருகன் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.