சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா, பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபா ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிறைக்கு திரும்பி இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த 24 ஆம் தேதி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, சிகிச்சை முடிந்து சிவசங்கர் பாபா இன்று (ஜூலை 28) மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.