தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி! - chennai latest news

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா உள்பட நான்கு பேர் மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

sivasankar-baba-case
sivasankar-baba-case

By

Published : Aug 14, 2021, 12:31 PM IST

Updated : Aug 14, 2021, 1:17 PM IST

செங்கல்பட்டு: கேளம்பாக்கம், சுசில் ஹரி பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், மூன்று போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ஆம் தேதி சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவை ஜூன் 18ஆம் தேதி சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிக்கிய முக்கிய ஆவணங்கள்

இந்நிலையில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிவசங்கர் பாபா ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உள்பட நான்கு ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். மற்றொரு ஆசிரியரான பாரதி வெளிநாட்டில் இருப்பதால் சிபிசிஐடி தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் 59ஆவது நாளிலேயே சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ள முதல் போக்சோ வழக்கிற்கான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

300 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குறிப்பாக 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். சிவசங்கர் பாபா, ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய நான்கு பேர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சிபிசிஐடி அளித்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து 100 கிலோ கஞ்சா கடத்திவந்த இருவர் கைது

Last Updated : Aug 14, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details