சென்னை: கன்னட திரைப்பட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், முக்கிய கன்னட நட்சத்திர நடிகருமான சிவராஜ்குமார் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தன் மனைவி கீதா சிவராஜ்குமாருடன் சென்று சந்தித்தார்.
இவரின் சகோதரரும் மற்றொரு கன்னட முக்கிய நட்சத்திரமுமான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு, கன்னட திரையுலகம், புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் துயரச் சம்பவமானது.