தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய அணிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து! - இந்திய அணி வெற்றி

சென்னை: ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

இந்திய அணிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!
இந்திய அணிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

By

Published : Jan 19, 2021, 6:05 PM IST

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் வென்றன.

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதின. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் மிக மோசமாக தோற்றது இந்திய அணி. பின்னர் எழுச்சி பெற்ற இந்தியா மெல்போர்ன் டெஸ்ட்டில் வென்று பதிலடி கொடுத்தது. சிட்னியில் நடந்த போட்டி டிராவில் முடிய பிரிஸ்பேனில் நடந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது டெஸ்டில் இரு அணிகளும் மோதின.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

இதில் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது இந்திய அணி. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. முன்னணி வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் புதுமுகம் மற்றும் போதிய அனுபவமற்ற வீரர்களை வைத்து இந்தியா சாதித்து காட்டியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ”டெஸ்ட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வெற்றி” எனவும், இயக்குனர் வெங்கட் பிரபு ”என்ன வெற்றி..! வரலாறு படைக்கப்பட்டது” எனவும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:திருப்பூர் ஆட்சியருக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details