ரயில்களில் மாற்றுத்திறனாளிகள், பெண்களின் இருக்கைகளில் வேறு பயணிகள் ஆக்கிரமிப்பு செய்வதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரயில்களில் இது தொடர்பாக திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ரயில்வே விதிகளை மீறி மாற்றுத்திறனாளிகளின் இடத்தில் 139 மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பு செய்து பயணம் செய்தது தெரிந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.