தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் அடிப்படையில் சித்த மருத்துவ மாணவர்கள் சேர்க்கை' - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி - student

சென்னை: "சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் இந்தாண்டு நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar

By

Published : May 31, 2019, 5:10 PM IST

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை மையம், மருத்துவமனையில் சேரும் குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் அரங்கம், மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கான நவீன காப்பகம், ரத்தப் பரிசோதனைக்கு அளிக்கப்படும் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லும் வசதி, அல்ட்ரா சோனோகிராம் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்பில் கரூர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களில் இருந்து 250 இடங்களாக உயர்த்தி 100 இடங்கள் கூடுதலாகவும் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களில் இருந்து 250 இடங்களாக உயர்த்துவதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு பெருந்துறை மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இந்த ஆண்டு மாநில அரசில் ஒதுக்கீட்டிற்கு வருகின்றன. இந்தாண்டு 3 ஆயிரத்து 350 எம்பிபிஎஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் முதுகலைப் படிப்பில் 508 இடங்கள் உள்ளன. பிற மாநிலங்களில் முதுகலை படிப்பிற்கான இடங்களை தொடர்ந்து பராமரிப்பதில் சிரமப்படுகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து புதிதாக முதுகலை மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக இடங்களைப் பெற்று வருகிறது.

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறப்படும். இதற்கான கலந்தாய்வு இருப்பிடச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் நேரில் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள சித்த மற்றும் ஆயுர்வேத படிப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது.

நீட் அடிப்படையில் சித்த மருத்துவ மாணவர்கள் சேர்க்கை

இந்தாண்டு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ படிப்பில் மாணவர்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்க வேண்டும் என மத்திய அரசு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து கொள்கை முடிவெடுத்து தமிழ்நாட்டில் சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்பில் மாணவர்கள் சேர்வது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details