தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' நூலின் லட்சமாவது பிரதியை வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி...

சென்னை: 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' என்ற நூலின் லட்சமாவது பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கியுள்ளார்.

communist-party
communist-party

By

Published : Jan 20, 2020, 10:33 PM IST

'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' என்ற நூலின் லட்சமாவது பிரதியை வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி லட்சமாவது பிரதியை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து 'மார்க்சிஸ்ட் லைப்ரரி' என்ற பெயரில் மார்க்ஸின் எழுத்துக்கள் அடங்கிய ஆப் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, "இ-புக் வந்தாலும் அவை அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு நிகராகாது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை புத்தகம் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. எத்தனை முறை படித்தாலும் புதிய பொருளை தரும் புத்தகம் அது. மனிதனை மனிதன் சுரண்டாத, வர்க்க பேதமில்லாத சமூக அமைப்பை உருவாக்க இந்த புத்தகம் அவசியம் தேவை.

2008லிருந்து முதலாளித்துவத்தால் ஏற்பட்டுவரும் பொருளாதார சிக்கல்களுக்கு இப்புத்தகத்தில் தீர்வுள்ளது. காற்றைத் தவிர அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டெல்லியில் காற்றையும் விற்பனை செய்கிறார்கள்.

நாட்டிலுள்ள ஒரு சதவிகித மக்களிடம் நாட்டின் 70 சதவிகித மக்களிடமுள்ள சொத்துக்களைவிட 4 மடங்கு அதிகமாகவுள்ளது என ஆக்ஸ்பார்ம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிகளவு சுரண்டப்பட்டதால் தற்போது அவர்களிடம் நுகர்வு சக்தியில்லை. இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால் லாபம் குறையுமென முதலாளிகள் நினைக்கிறார்கள். பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது" என்றார்.

லட்சமாவது பிரதி வெளியிட்டார் சீத்தாராம் யெச்சூரி

மேலும் பேசிய அவர், குடியுரிமை கொடுக்கத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேடு எதற்கு?. என கேள்வி எழுப்பினார். அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே தவிர நீதி வழங்கவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்வி கேட்டால் பதிலளிக்கக்கூடாது, ஆவணங்களை காட்டக்கூடாது" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யாரிடமும் ஆவணங்கள் கேட்காதீர்கள் என்றுதான் மோடியிடம் நாங்கள் கூறுகிறோம். 13 மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரும் 23ஆம் தேதி பகத்சிங் பிறந்த தினத்தை மதநல்லிணக்க, மத ஒற்றுமை தினமாகவும் 26ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை பாதுகாப்போம் என உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோல் 30ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினமும் அனுசரிக்கப்படும்" என்றார். இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷணன், மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும், மீறக்கூடாது' - சீத்தாராம் யெச்சூரி

ABOUT THE AUTHOR

...view details