தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பியை அடித்ததால் அம்மா என்னை அடிப்பாரோ? - தற்கொலை செய்த சிறுமியின் இறுதி ஆடியோ! - Suicide case in maduravoyal

மதுரவாயலில் தம்பியை அடித்ததால் அம்மா தன்னை அடித்துவிடுவார் என பயந்து அவனது அக்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பியை அடித்ததால் அம்மா என்னை அடிப்பாரோ? - தற்கொலை செய்த அக்காவின் இறுதி ஆடியோ!
தம்பியை அடித்ததால் அம்மா என்னை அடிப்பாரோ? - தற்கொலை செய்த அக்காவின் இறுதி ஆடியோ!

By

Published : Dec 20, 2022, 5:32 PM IST

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக உயிரிழந்த ஷர்மி தனது தாயிடம் செல்போனில் பேசிய ஆடியோ

சென்னை: மதுரவாயல் சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் (37) - புனிதா (32) தம்பதி. இவர்களுக்கு ஷர்மி (12) என்ற மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் ஷர்மி அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பும், ஷர்மியின் தம்பி அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (டிச.19) பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷர்மி, அவரது தந்தைக்குப் போன் செய்துள்ளார். அப்போது, “தம்பி சரியாக படிக்கவில்லை. எனவே, நான் அவனை அடித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து இரவு வீட்டுக்கு வந்த ஷர்மியின் தந்தைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஷர்மி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து ஷர்மியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஷர்மியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் மற்றும் விருகம்பாக்கம் மகளிர் காவல் துறையினர், ஷர்மியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஷர்மி தனது தம்பி சரியாக படிக்கவில்லை என்று அவனை அடித்ததாகவும், அதனால் தனது தாயார் வந்து தம்பியை அடித்ததற்காக தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் இருந்து வந்ததாகவும், அந்த பயத்தின் காரணமாகவே ஷர்மி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்கொலை தவிர்

மேலும் இதுகுறித்து மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக உயிரிழந்த ஷர்மி தனது தாயிடம் செல்போனில் பேசியுள்ளார். அதில், ‘தனக்கு இருக்கும் அறிவுக்கு விருது மற்றும் பாராட்டு விழா நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான ஆடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'போன் எடுக்க இவ்வளவு நேரமா?' என கேட்ட தாய் - மனமுடைந்த மகள் தூக்கிட்டுத் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details