தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐபிஎல் இறுதிப்போட்டியில் 'ஒத்த ஓட்டு பாஜக' பதாகை! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியின்போது ரசிகர் ஒருவர் 'ஒத்த ஓட்டு பாஜக' என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.

'ஒத்த ஓட்டு பாஜக' பாதாகை
'ஒத்த ஓட்டு பாஜக' பாதாகை

By

Published : Oct 16, 2021, 6:23 AM IST

Updated : Oct 16, 2021, 8:54 AM IST

துபாய்: சமீபத்தில் நடந்து முடிந்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சுயேச்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. இதையடுத்து, 'ஒத்த ஓட்டு பாஜக', 'Single Vote BJP' ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

இந்நிலையில், நேற்று (அக். 15) துபாய் பன்னாட்டு மைதானத்தில் ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின்போது ரசிகர் ஒருவர் 'ஒத்த ஓட்டு பாஜக' என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. இதனை நெட்டிசன்கள் கிண்டல் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:'பாஜக நிர்வாகிக்கு ஒரே ஒரு ஓட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!

Last Updated : Oct 16, 2021, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details