சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று(ஜூன் 17) தொடர்ந்து 4ஆவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,
"தலைமை கழக நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது. ‘ஒற்றைத் தலைமை’ தீர்மானம், அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். திட்டமிட்டப்படி ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமிக்கு திருவண்ணாமலையில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு!