தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது

சென்னை: பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ அறிக்கை.
மருத்துவ அறிக்கை.

By

Published : Sep 8, 2020, 6:50 PM IST

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதற்கிடையே, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், திங்கள்கிழமை (செப். 7) அவரது உடல்நிலை குறித்து நல்ல தகவல் வெளியாகும் என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் நேற்று (செப். 7) காணொலி பதிவு ஒன்றை வெளியிட்ட எஸ்.பி.பி. சரண், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமடைந்துள்ளார் எனவும், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கை

இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் இன்று (செப்டம்பர் 8) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது. எக்மோ, செயற்கை சுவாச சிகிச்சை தொடர்ந்து வருகிறது. அதனால் அவை சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details