பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காந்தி நகரில் வசித்துவருகிறார். இவருக்கு நேற்று (ஆகஸ்ட் 04) உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவில் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எஸ்பி பாலசுப்பிரமணியம் காணொலி ஒன்றை வெளியிட்டு அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
அதில், “எனக்கு கரோனா சிறிய அளவிலேயே பாதிப்பு உள்ளது. மருத்துவர்கள் நன்றாக என்னை கவனித்துக் கொள்கின்றனர். என்னைப் பற்றி நீங்கள் யாரும் கவலைபடாதீர்கள். தயவுசெய்து என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரிக்க வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள காணொலி எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் பச்சன்