தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எளிய நிதி சேவை புதிய தொழில்களை உருவாக்கும்' - சி. பொன்னையன் - Simple financial service will create new business

தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும், துரிதப்படுத்த, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான எளிய நிதி சேவை, புதிய தொழில்களை நிறுவுவதற்குச் சாத்தியமாக்கும் என சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

pon
pon

By

Published : Nov 20, 2020, 6:34 AM IST

Updated : Nov 20, 2020, 11:43 AM IST

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தோராயமாக ரூ.49.48 லட்சம் ஆகும். இத்துறையில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் தொழில் மற்றும் சேவை துறை சார்ந்த, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் பேட்டைகள் உருவாகியுள்ளன.

அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய போதிலும், இச்சூழ்நிலையில் எளிய நிதி சேவை சமூக பாதுகாப்பு தேவையாகக் கருதப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்குமான நிதி சேவை மற்றும் போதிய சமூக பாதுகாப்பு குறித்த காணொலி கருத்தாய்வு மாநில திட்ட கமிஷன் துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தாய்வின் நோக்கம் அனைத்து வகுப்பினருக்கும், குறிப்பாக சமூகத்தில் பின் தங்கியவர்களுக்குப் போதிய சமூக பாதுகாப்பு மற்றும் எளிய நடைமுறை கொண்ட நிதி சேவை ஆகும்.

இதில் பேசிய பொன்னையன், "அனைவருக்குமான எளிய வங்கி சேவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக, குறைந்த வருவாய் பிரிவினர் நிதி தற்சார்பு பெறுவதற்கு பெரிதும் ஊக்கப்படுத்தும். மேலும், இச்சேவை மூலம் வழங்கப்படும் கடன்கள் அவர்கள் சிறு வணிக நிறுவனம் தொடங்குவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும், துரிதப்படுத்த, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான எளிய நிதி சேவை, புதிய தொழில்களை நிறுவுவதற்கு சாத்தியமாக்கும். எளிய நிதி சேவையினை விரிவாக்கும் தருவாயில் அதிக வேலை வாய்ப்பினை உருவாக்கி பொருளாதாரத்தினை மேம்படுத்தலாம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலை துறையில் சமூக பாதுகாப்பானது தொழில் முனைவோரது வாழ்வாதாரத்தை உயர்த்தும்.

பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு கிடைக்கக்கூடிய வங்கி சேவை, அனைவருக்குமான எளிமை மற்றும் நடைமுறை சிக்கலற்ற வங்கி சேவை கிடைக்க அரசு முயற்சிக்கிறது. கரோனா தொற்றின் காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

Last Updated : Nov 20, 2020, 11:43 AM IST

For All Latest Updates

TAGGED:

C. Ponnaiyan

ABOUT THE AUTHOR

...view details