தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெற்றது. முன்னதாக தமிழ்நாட்டின் அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமிக்கும் உத்தரவை மாநில அரசு நேற்றே(ஜூன் 29) பிறப்பித்திருந்தது.
சைலேந்திரபாபுவிற்கு பூங்கொத்துகொடுத்த திரிபாதி
அந்த உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று முற்பகல் சுமார் 11.30 மணிவாக்கில், தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அப்பதவியில் இருந்து ஓய்வுபெற்ற திரிபாதி பூங்கொத்து கொடுத்து காவல் துறை சார்ந்த பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து திரிபாதியும், சைலேந்திரபாபுவும் காவல் துறை கொடுத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
அப்போது ஓய்வுபெற்ற திரிபாதிக்கு சக காவல் துறை அலுவலர்கள் நெகிழ்ச்சியுற பிரியாவிடை கொடுத்தனர்.
இதையும் படிங்க: செயல் வீரர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்