சென்னை: தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மாநில, மத்திய அரசுகள் மற்றும் வனத்துறையினரால் அறிவிக்கப்பட்ட 'பாதுகாக்கப்பட்ட' நான்கு புலிகள் காப்பகங்களான- முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் மற்றும் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவையும் காரணம் என்று சொல்லலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் கழுகுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு: ஆய்வில் தகவல் இந்தப் புலிகள் காப்பகங்களால் காடுகளில் உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் மற்றும் அரிய நிலையில் (Endangered) இருந்த பிணந்தின்னிக் கழுகுகள் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது என ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியானது முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் மற்றும் நீலகிரி காப்புக் காடுகள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
உதகை அரசு கல்லூரியில் வனவிலங்கு துறையில் பணியாற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் முனைவருமான பா. ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு உட்பட்ட நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் கழுகுகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
"பத்தாண்டுகளுக்கு முன் கழுகுகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக இருந்தது. தற்போது அவைகளின் எண்ணிக்கை 130லிருந்து 140 வரை எண்ணிக்கையில் உள்ளதாக எங்களுடைய ஆராய்ச்சியில் தெரிய வந்தது", எனத் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் கழுகுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு தொடந்து பேசிய அவர், ’’இந்தியாவில் 9 வகையான கழுகுகள் பார்க்கப்படுகின்றன. அவற்றில் 4 வகையான கழுகுகள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. இந்த நான்கு வகையான கழுகுகளின் வெண்முதுகு கழுகுகள் அதிக அளவிலும், இரண்டாவதாக நீண்ட அலகு கழுகுகளும், செங்கழுத்து கழுகுகளும் மற்றும் மஞ்சள் மூக்கு கழுகுகளும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன .
தற்போது இந்த கழுகுகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டு வருவதற்கும் முக்கியமான காரணகளாக புதிதாக அறிவிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் மற்றும் கால்நடைகளுக்குப்பயன்படுத்தப்பட்ட வலி நிவாரண மருந்துகள் தடை செய்யப்பட்ட காரணங்களால், கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதற்கு காரணமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் கழுகுகளின் எண்ணிக்கை கணிசமான உயர்வு: ஆய்வில் தகவல் இவ்வகையான பிணந்தின்னி கழுகுகள் காடுகளின் 'தூய்மைப் பணியாளர்கள்' என கருதப்படுகிறது. சுற்றுச்சூழலில் இந்த கழுகுகளின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் வனப்பகுதிகளில் இறந்துபோன விலங்குகளின் உணவுகளை உட்கொள்வதால் அழுகிய நிலையில் அவைகளால் ஏற்படும் பல நோய்கள் வராத வண்ணம் வன உயிரினங்களையும் மனித இனங்களையும் பாதுகாக்கின்றன. ஆகவே, இது போனற பிணந்தின்னி கழுகுகளின் பாதுகாப்பு இன்றியமையாத ஒன்றாகும்.
இது குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி நம்மிடம் கூறுகையில், "1980 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த கழுகுகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்தது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. எனினும், காலப்போக்கில் காடுகள் நிலங்களாக மாற்றப்பட்டதாலும், வனத்தை ஒட்டியப்பகுதிகளில் மனிதர்கள் புலி மற்றும் சிறுத்தையை கொல்வதற்காக வைக்கப்படும் விஷம் தடவிய சடலங்களை உணவாக சாப்பிட்டதால் கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி பேட்டி 'டைக்குளோபினாக்' என்ற மருந்தை காடுகளின் அருகே வசிப்பவர்கள் தங்களது கால்நடைகளை பாதுகாக்க உபயோகித்து வந்தனர். இந்த மருந்து தடவப்பட்ட கால்நடைகளை புலி அல்லது சிங்கம் வேட்டையாடிவிட்டு, மீதமுள்ள உணவை விட்டுச்செல்லும். பிறகு கழுகுகள் இதனை உண்ணும்போது இந்த மருந்துடைய தாக்கம் கழுகுகளின் கிட்னியைப் பாதித்த பின் இறந்து விடும். இந்த டைக்குளோபினாக் மருந்தை இந்தியாவில் தடை செய்த பின்னும் விற்பனையாகிறது.
இன்றைய காலகட்டங்களில் வன சிறு உயிரினங்கள் அழிந்து கொண்டும் வரும் நிலையில், இயற்கையின் உணவுச் சங்கிலியில் கழுகுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. எனவே, கழுகுகளை பாதுகாப்பதில் மனிதர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உண்டு.
இது குறித்து வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் நம்மிடம் கூகையில், "வனத்துறை அனைத்து வகையான வன உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க ஒரு சில திட்டங்களை வகுத்து வருகிறோம்", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குளு குளு குற்றால அருவிகள் - கோடை விடுமுறையை கொண்டாட பொதிகை மலை பற்றிய சிறப்பு தொகுப்பு