சென்னை:நீரிழுவு நோய்.. உலகத்தையே மிரட்டும் நோயாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாகவும் மாறி வருகிறது. நீரிழிவு நோயைக் (சர்க்கரை நோய்) கட்டுப்படுத்த மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகளிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. சித்த மருத்துவத்தில் மேக நோய்களான பிரமேகம், மதுமேகம் எனும் வரிசையில் சர்க்கரை நோயைக் குறிப்பிட்டுள்ளனர்.
சித்த மருத்துவப் புரிதலின்படி சிறுநீர் கழித்த இடத்தில் சிறுநீர் நுரைத்துக் காணப்படுவது மேக நோய்களின் குறி குணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சித்த மருந்துகளை உண்பதால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மருந்துகள் அறிவியல் முறைப்படி நிருபணம் செய்யப்படவில்லை எனவும் குறி வந்தனர். இந்த நிலையில் இந்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சித்துறை ஆய்வு செய்து , மதுமேக சூரணம், வெண்தாமரை சூரணம் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாதது என நிருபணம் செய்துள்ளனர்.
நோய் தீர்க்கும் சித்த மருந்துகள்:இது குறித்து இந்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் நடராஜன் கூறும்போது, “உலகம் இன்று வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தொற்றா நோய்கள் என கூறப்படும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் அதிகளவில் வருகிறது. இதற்கான தீர்வைத் தேடி மக்கள் பல இடங்களில் அலைகின்றனர். நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் இதற்கான மருந்துகள் இருக்கின்றன.
சித்த மருத்துவம் பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி, சென்னையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தின் தன்மையையும், அதன் செயல்பாடுகள், பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு:சென்னை ராமசந்திரா மருத்துவக்கல்லூரியின் பேராசிரியரும், இருதயவியல் நிபுணருமான தணிகாசலம் மேற்பார்வையில் 2008 ம் ஆண்டு முதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பல்வேறு விதமான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுதம், இருதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற எல்லா நோய்களும் ஏற்படுவதற்கு காரணம் ரத்தநாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் என்பது தெரிய வருகிறது.
எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு மனிதரையும் தொடர்ச்சியாக கண்காணித்து பார்க்க கூடிய ஆய்வினை 10 ஆண்டுகள் மேற்கொண்டோம். அதில் குறிப்பாக சித்த மருத்துவத்தின் மதுமேக சூ ரணம் ஆய்வாக எடுத்துக் கொள்ளப்பட்டு, சர்க்கரை நோய் இருந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் கொடுத்து பரிசோதனை செய்த போது அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தது. இதே காலத்தில் நவீன மருந்துகளை எடுத்துக் கொண்ட நோயாளிகள் கூடுதலாக 10 மாத்திரைகளை வேறு நோய் தாக்கத்திற்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டவர்கள் அதே அளவில் மருந்துகளை எடுக்கும் நிலைமை மாறாமல் இருந்தது.
நீரிழிவு நோய் முற்றிய நிலையில் காலில் புண் வருதல் போன்ற எந்த பாதிப்பும் அவர்களுக்கு வரவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிதியை பெற்று ஆராய்ச்சி செய்யப்பட்டு, அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. 10 வருடத்தில் 8080 நபர்களை தொடர்ச்சியாக கண்காணித்தோம். அவர்களில் யாரும் சர்க்கரை நோயாளியாக மாறவில்லை. இதனால் அவர்களுக்கும், அரசிற்கும் நிதிசுமை குறைக்கப்பட்டுள்ளது.