தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; இளைஞருக்கு அரிவாள் வெட்டு - new year cake cutting problem

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேக் வெட்டும்போது ஏற்பட்ட தகராறில் ஆதம்பாக்கத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

youngster
youngster

By

Published : Jan 1, 2021, 2:44 PM IST

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 1ஆவது தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கேக் வெட்டும்போது அதே பகுதியைச் சேர்ந்த விமல்(23) என்ற இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த விமலை மீட்ட உறவினர்கள் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தகவல் அறிந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக வெகு நாட்களாக திட்டம் தீட்டியவர் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமயம் பார்த்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நேரத்தில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விமலை வெட்டியவர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details